இந்தியன் பில்லர்ஸ் என்ற லாப நோக்கமற்ற, அரசியல் சார்பற்ற அமைப்பு தருமபுரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உயிர் காக்கும் உன்னதப் பணிகளான இரத்த தானம், கண் தானம், உடல் தானம், உடல் உறுப்பு தானம் ஆகியவற்றிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே முதல் முறையாக இவற்றிற்கான கால் சென்டரை தொடங்கி கடந்த 46 மாதங்களாக யாரிடமும் நன்கொடை பெறாமல், தருமபுரியில் இதற்கென தனி அலுவலகத்துடன் மூன்று பணியாளர்களுடன் சிறப்பாக செய்து வருகிறோம்.

infoஇரத்த தானம், கண் தானம், உடல் தானம், உடல் உறுப்பு தானம் கால் சென்டர் எண்கள்
இரத்த தானம் – 94888 48222
கண் தானம் – 96888 48222
உடல் தானம் & உடல் உறுப்பு தானம் – 96883 48222

இது நாள் வரை எங்கள் அமைப்பின் மூலம் செய்யப்பட்ட பணிகளில் சில……..

தினந்தோறும் எங்களுக்கு 60 முதல் 150 கால்கள் இரத்த தேவைகளுக்காக  வருகிறது. மேலும் இணையதளம், சமூக வலைத்தளங்கள் மூலமும் இது நாள் வரை எங்கள் அமைப்பின் மூலம் (14th June 2012 to till date.. 11th April 2016) 46 மாதங்களில் 99,200 நபர்களுக்கு இலவசமாக இரத்தம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம்.

இரத்தம் கொடுக்க இதுவரை இரண்டு லட்சம் நபர்கள் எங்களது கால் சென்டர், சமூக வலைதள பக்கங்கள், மற்றும் இணையதள பக்ககத்தில் பதிவு செய்துள்ளனர், மேலும் எங்களது www.iblood.in என்ற இணையதளம் உலகில் அதிக தன்னார்வலர்களின் விபரங்களை உள்ளடக்கிய இணையதளம் என உலக சாதனை சான்றிதழ் பெற்றுள்ளது,

இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் மூலம் இது வரை 1217 இரத்த தான முகாம்களை இந்தியா முழுவதிலும் நடத்தி உள்ளோம். இதில் கடந்த 2014-ம் ஆண்டில் ஜூலை ஐந்தாம் தேதி அன்று ஒரே நாளில் RIVER OF LIFE  என்ற பெயரில் 400  இரத்த தான முகாம்களை நடத்தி உள்ளோம்.

கண்தான கால் சென்டர் மூலம் இதுவரை 810 ஜோடி கண்களை தனமாக பெற்று கொடுத்துள்ளோம். 48,000 நபர்களிடம் கண்தான உறுதி பத்திரத்தை பெற்றுள்ளோம்.

உடல்தான கால் சென்டர் மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இதுவரை ஏழு உடல்களை தானமாக வழங்கி உள்ளோம். உடலுருப்புதான கால் சென்டர் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கிட்னி, கண், நுரையீரல், கணையம் பாதிக்கப்பட்டோர் பதிவு செய்ய உதவி செய்துள்ளோம்,

இதுவரை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கடலூர், மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிகள், பள்ளி குழந்தைகள் என 35,000 மரக்கன்றுகளை வழங்கி உள்ளோம்.  700 நபர்களுக்கு கீரை விதைகளை வழங்கி உள்ளோம்.

கடந்தாண்டு ஏற்பட்ட மூன்று (நேபாளம், சென்னை, கடலூர்)பேரிடர்களிலும், எங்கள் இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் மூலம் மீட்பு பணி, மற்றும் களப்பணி ஆற்றியுள்ளோம்.

தற்போது வரும் ஏப்ரல் 14 (நாளை மறுதினம்) முதல் மேற்கண்ட அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து ஒரே எண்ணில் துவங்க உள்ளோம். மேலும் இந்த புதிய எண் IVR தொழில்நுட்பத்தினுடன் செயல்படுத்த உள்ளோம்.

இந்தியாவில் எந்த பகுதியில் / எந்த மாநிலத்தில் / எந்த  கிராமத்தில்  இரத்தம் தேவை பட்டாலும், கண்கள் தானம் கொடுக்க நினைத்தாலும், முழு உடல் தானம் கொடுக்கவும் பதிவு செய்யவும், உடல் உறுப்பு தானம் பெறவும் – கொடுக்கவும் அரசு முறைப்படி வழிகாட்டுதல் பெறவும் எங்களை அழைக்கவும்.

தங்களது பொன்னான நேரத்தினை செலவிட்டு படித்தமைக்கு நன்றி

ந.வினோத், தலைவர்
இந்தியன் பில்லர்ஸ்,
தபால் பெட்டி எண் – 5
தருமபுரி – 636 705
தமிழ்நாடு.

Whatsapp / Telegram : 98427 04342
E.Mail: vinoth@indianpillars.org
Facebook: www.facebook.com/VinothIndianPillars

#Born2Save #Born2SaveLife #Blood #Eye #Body #Organ #Donation #IndianPillars #BloodDonation #EyeDonation #BodyDonation #OrganDonation #TreePlantation #DisasterManagement